ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை மாற்றியவர் கைது!

0

அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்துக்காக வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரத்தை மாற்றி போக்குவரத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தம்புளையிலிருந்து கட்டுகஸ்தோட்டை வரை மரக்கறி விநோகம் செய்ய கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் வழங்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரத்தை ஒருவர் போக்குவரத்து அனுமதியாக மாற்றியுள்ளார்.

இந்தநிலையில் அதன் செல்லுப்படியாகும் தினத்தை நீடிப்பதற்காக பொலிஸ் நிலையம் சென்ற குறித்த நபர் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை கட்டுகஸ்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.