ஊரடங்கு காரணமாக வெளிமாவட்டங்களில் அகப்பட்டோர் சொந்த இடங்களுக்குத் திரும்ப டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

0

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்டங்களுக்குள்ளும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களுக்கும் தமது வாழ்வாதார தேவைகள் மற்றும் பிற தேவைகளுக்காக சென்று மீளவும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாதுள்ள மக்கள் தமது விபரங்களை தெரியப்படுத்துமிடத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மீளவும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப விரும்புபவர்கள் தமது

முழுப் பெயர் –
அடையாள அட்டை இலக்கம் –
திரும்ப வேண்டிய சொந்த முகவரி –
சொந்த பிரதேச செயலகப்பிரிவு –
தொலைபேசி இலக்கம் –
தற்போது தங்கியுள்ள முகவரி –

உள்ளிட்ட விபரங்களை கீழக்காணும் 0777 781 891 என்ற WhatsApp (வட்சப்) இலக்கத்திற்கு அனுப்பும் பட்சத்தில் அதற்காதன தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்