ஊரடங்கு சட்டதை மீறிய 300 ற்கும் மேற்பட்டோர் கைது

0

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டதை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 300க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரையான காலப்பகுதியில் 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.