ஊரடங்கு சட்டத்தினை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கி பிரயோகம் – மூவர் காயம்!

0

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறி பயணித்த கார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

மொரட்டுவ, எகொடஉயன பகுதியில் வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸார் நிறுத்துமாறு உத்தரவிட்டதையும் மீறி பயணித்த நிலையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த காரில் 4 பேர் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், மூவர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.