ஊரடங்கு சட்டத்திற்கு மத்தியிலும் அரியாலையில் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்!

0

யாழ்.அரியாலை – நாவலடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் கள்ளு தவறணையில் ஏற்பட்ட வாய்த்தா்க்கம் மோதலாக மாறியதனாலேயே இந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வாள்வெட்டுக்கு இலக்கானவா் உடனடியாக அங்கிருந்தவா்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றவரை தேடி வருகின்றனா்.