19 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) காலை தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மதியம் 2 மணிக்கு அமுலாகும் என்றும் இது எதிர்வரும் திங்கட்கிழமை காலை 06 மணிக்கே மீண்டும் தளர்த்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இருப்பினும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவிப்பு வரும்வரை ஊரடங்கு தொடரும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.