ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தும் வயது 16 ஆக அதிகரிப்பு

0

ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தக்கூடிய வயதினை 16 ஆக அதிகரிப்பதற்காக தொழில் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் வருமாறு,

” 16 வயது வரையில் கட்டாய பாடசாலை கல்வி என்ற ரீதியிலான சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைவான வகையில் தொழில் கட்டளைச் சட்டத்தில் ஊழியர்களை தொழிலில் ஈடுபடுத்தும் ஆக குறைந்த வயது 16 ஆக அதிகரிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட தொழில் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக 2020 ஜுன் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக கீழ் கண்ட சட்டங்கள் மற்றும் கட்டளைகளில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக திருத்த சட்ட மூலம் திருத்த சட்ட வரைபு பிரிவினால் வகுக்கப்பட்டுள்ளது.

• 1954 ஆம் ஆண்டு இலக்கம் 19 இன் கீழான (129 ஆவது அதிகாரம்) வர்த்தக நிலையங்கள்(சாப்பு) மற்றும் பணியக ஊழியர்கள் தொடர்பான தொழில் மற்றும் வேதனத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டம்.

• 1956 ஆம் ஆண்டு இலக்கம் 47 இன் கீழான பெண்கள் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்தும் சட்டம்

• (135 அதிகாரம்) ஆக குறைந்த வேதனம் (இந்திய தொழிலாளர்கள்) கட்டளை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டம்

• 1942 ஆம் ஆண்டு இலக்கம் 45 இன் கீழான தொழிற்சாலை கட்டளைச் சட்டம்

• 1958 இம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழான ஊழியர் சேமலாப நிதி சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய 1958.10.31 ஆம் திகதி அன்று இலக்கம் 11573 என்ற அரச அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட உத்தரவு

இதற்கு இமைவாக இதன் திருத்த சட்ட மூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டு அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும், 1958 ஆம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழான ஊழியர் சேமலாப நிதி சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய வெளியிடப்பட்ட உத்தரவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக தொழில் அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்ககப்பட்டுள்ளது.