ஊழியர் சேமலாப நிதியின் தற்போதைய மிகுதியையும் அதுதொடர்பான தகவல்களையும் தத்தமது அலைபேசிக்கு குறுந்தகவலாக மாதாந்தம் அனுப்பும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தொழில் திணைக்கள ஆணையாளர் ஏ. விமலவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டையை உள்ளீர்த்து, தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்படுத்தப்பட்டு வந்த திட்டம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழியர் சேமலாப நிதியின் தற்போதைய இருப்பு தொடர்பான தகவல்களை, மாதாந்தம் தத்தமது அலைபேசிக்குக் குறுந்தகவலாக அனுப்பும் வேலைத்திட்டத்துக்கான நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் “பி” அட்டை இல்லாத சந்தர்ப்பத்திலும் ஊழியர் சேமலாப நிதியை இதன்மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.