எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து: 307 கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு

0

கொழும்பு கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் சம்பந்தப்பட்ட கடல் பேரழிவைத் தொடர்ந்து இதுவரை மொத்தம் 307 கடல் வாழ் உயிரினங்கள் இறந்துள்ளன.

அதன்படி 258 ஆமைகள், 43 டொல்பின்கள் மற்றும் ஆறு திமிங்கலங்கள் இறந்துவிட்டதாக வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அரசாங்க ஆய்வாளர் திணைக்களம் இந்த விவகாரம் குறித்த அறிக்கையை நேரடியாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஒப்படைக்கவுள்ளது.

இதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்களின் நெக்ரோஸ்கோபிகளின் இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்துதில் உள்ளூர் அதிகாரிகள் தாமதங்களை ஏற்படுத்துகின்றனரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தீக்காயங்கள், இரசாயனங்கள் வெளிப்படுவதால் ஏற்படும் மூச்சுத்திணறல் ஆகியவை காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன என ஜூன் 17 அன்று நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடல் விலங்குகள் இறப்பதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் ஏபதனால் இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜசிங்கவும் தெரிவித்திருந்தார்.

மே 24 அன்று விபத்துக்குள்ளான கப்பலில் சுமார் 25 டொன் நைட்ரிக் அமிலம், 300 மெட்ரிக் டொன்
எரிநெய் 78 மெட்ரிக் டொன் கரிமப் பொருட்கள் அல்லது உயிர்வளத்திலிருந்து தயாரிக்கப்படும் உயிரி எரிபொருள்கள் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் உயிர்வளத்திலிருந்து தயாரிக்கப்படும் உயிரி எரிபொருள்கள் நாட்டின் கடல் சூழலை, பல ஆண்டுகளாக பாதிக்கக்கூடும் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் கணித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.