வவுனியா செட்டிகுளம் முதிலியார்குளம் பகுதியில் இன்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) ஆராதனை நடாத்திய 15 இற்கும் மேற்பட்டோர் செட்டிகுளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வவுனியா செட்டிகுளம் முதலியார் குளம் பகுதியில் இன்றைய தினம் கிறிஸ்தவ மதஆராதனை ஒன்று நடைபெற்றருந்தது.
இது தொடர்பாக செட்டிகுளம் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கமைய அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் ஆராதனையை நடாத்திய போதகர் உட்பட 15 இற்கும் மேற்பட்டோரை கைதுசெய்திருந்ததுடன் எச்சரித்து பின்னர் விடுதலை செய்திருந்தனர்.