எஞ்சிய சமுர்த்தி பயனர்களுக்கான கொடுப்பனவு குறித்த அறிவிப்பு வெளியானது!

0

காத்திருப்பு பட்டியலிலுள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கான 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக விசேட ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கு தேவையான நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டுள்ளது.

கிராம மட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி செயலணி கூறியுள்ளது.