நாடாளுமன்றத்தினை மீண்டும் கூட்டுமாறு எதிர்கட்சிகளினால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையினை சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக்கொண்டுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
“நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் உரிய நேரத்தில், நல்லெண்ணத்துடன் கோரியுள்ளன. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் சபாநாயகர் என்ற வகையில், இக்கோரிக்கையை ஆதரிக்கிறேன்.
நாடாளுமன்றம் மீளக் கூட்டப்படுமாயின், அதன் சிறந்த செயற்பாட்டை உறுதிப்படுத்துவது சபாநாயகரின் பொறுப்பாகும்” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தினை உடன் கூட்டுமாறு எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.