எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியால நீர்வெட்டு

0

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) கொழும்பின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 15 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 01, 03, 09, 14 மற்றும் கடுவலை ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு 02, 07, 08 மற்றும் கொழும்பு 10 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்க்குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.