எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிப்பு

0

27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு இந்த விலை குறைப்பு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த விலைக் குறைப்பு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் லங்கா சதொச, மற்றும் கடைகளில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரிசி வகைகள், சீனி, பெரிய வெங்காயம், தேயிலை, உருளைக் கிழங்கு, கடலை, காயந்த மிளகாய், டின் மீன், நெத்தலி, கோழி இறைச்சி, உப்பு, பால் மா, சோயா எண்ணெய், முகக் கவசங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.