எதிர்வரும் தினங்களில் அனர்த்தம் ஏற்படும் அபாயம்

0

இலங்கையின் தென் கிழக்கு வங்காள விரிகுடாவின் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை காரணமாக, பாதிக்கப்படலாம் என அணுமானிக்கப்படும் மக்களுக்கான உதவிகளை, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

எதிர்வரும் தினங்களில் நாட்டில் வானிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இடர் நிலைமையை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இடர் முகாமைத்துவ அமைச்சு, சுகதார அமைச்சு, நீர்பாசன அமைச்சு மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த திட்டத்தை வகுத்துள்ளன.

அனர்த்தங்களை எதிர்நோக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களிலும், தமது உறவினர்களின் இடங்களிலும் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, சுய தனிமைப்படுத்தலில் இருக்கின்ற மக்கள், அனர்த்தங்களினால் பாதிக்கப்படுவார்களேயானால், அவர்களை தற்காலிக முகாம்களில் தங்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அனைத்து நடவடிக்கைகளும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கப்படும் என இடர்முகாமைத்துவ அமைச்சு தெரிவிக்கின்றது.