எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கலாம்

0

எதிர்வரும் காலத்தில் மேலும் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்களில் விலை மேலும் அதிகரிக்கக்கூடும். அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது அந்தளவு சுலபமான விடயமல்ல.

பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் பேசியிருந்தோம். எனவே இது எமது நாட்டில் மாத்திரம் ஏற்பட்ட நிலை அல்ல. உலக சந்தையின் நிலவரம்.

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் சீனி, எரிவாயு, பால்மாவின் இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டதால் அரசாங்கத்தின் வருமானம் குறைந்துள்ளது.

எதிர்வரும் காலத்தில் மேலும் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் என்பதால் யதார்த்தத்திற்கு முகங்கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.