எதிர்வரும் நாட்களில் கோவிட் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்! – இராணுவத் தளபதி

0

இலங்கையில் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கும் அதேவேளை, எதிர்வரும் நாள்களில் கோவிட் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இராணுவத் தளபதியும், கோவிட் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், ஒவ்வொருவரும் கோவிட் தடுப்பு சுகாதார விதிமுறைகளை அனைத்து சந்தர்ப்பங்களிலும் உரியவாறு கடைப்பிடிக்க வேண்டும்.

பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் நேரங்களில் மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பு அவர்களின் கைகளில்தான் தங்கியுள்ளது.

கட்டுமீறிப் போன கோவிட் தொற்றை கட்டுப்படுத்த வேண்டுமெனில் அது மக்களின் நடவடிக்கைகளில்தான் தங்கியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.