எதிர்வரும் 11ஆம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து சேவை ஆரம்பம்!

0

சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் ஆலோசனைகளுக்கமைய, எதிர்வரும் 11ஆம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து சேவை ஆரம்பமாகவுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அலுவலகம் செல்வோர் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக பயணிப்போர் மாத்திரமே பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் 11ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம், ஊரடங்கு சட்டம் இருக்கும் நிலையிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவரவும் நிறுவனங்களை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.