எதிர்வரும் 20ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக அறிவிப்பு!

0

எதிர்வரும் 20ஆம் திகதி வரை அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த காலப்பகுதி அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அசாதாரணமான நிலை காரணமாக இதற்கு முன்னரும் இதுபோன்ற காலப்பகுதி அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.