எந்த சக்தியும், தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தானதாக மாறுவதற்கு அனுமதியளிக்க முடியாது – பாதுகாப்பு செயலாளர்

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் எந்த சக்தியும், தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தானதாக மாறுவதற்கு அனுமதியளிக்க முடியாது என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

2019 மே 19 ஆம் திகதி 30 வருட யுத்தத்தினை முடிவிற்கு கொண்டுவந்ததை தொடர்ந்து முப்படையினரும், பொலிஸாரும், சிவில் பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்களும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் வரை நாட்டில் ஒரு பயங்கரவாத சம்பவம் கூட நிகழாதை உறுதி செய்து அமைதியை பாதுகாத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படையணியை சேர்ந்த 29 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 60 ஆயிரம் பாதுகாப்பு படையினர் கடுமையான காயங்களிற்கு உள்ளாகினர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசத்தின் வெற்றிக்கான தங்களது நீண்ட பயணத்தின் போது 14 ஆயிரம் யுத்தவீரர்கள் வாழ்நாள் காயங்களை சந்தித்து சக்கர நாற்காலிகளுக்குள்ளும் கட்டில்களிற்குள்ளும் முடக்கப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடங்களும் பத்து மாதங்களும் நீடித்த இறுதிகட்ட வன்னி நடவடிக்கையின் போது 5 ஆயிரத்து 900 படைவீரர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர். 29 ஆயிரம் பேர் அங்கவீனர்களாகி நிரந்தரமான கடும் காயங்களுடன் வாழ்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேசத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.