எந்த நேரத்திலும் மீண்டுமொரு கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் உள்ளது

0

பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாவிடின் இலங்கையில் எந்த நேரத்திலும் மீண்டுமொரு கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் இருப்பதாக தொற்று நோயியல் பிரிவு எச்சரித்துள்ளது. 

எனவே, புத்தாண்டு காலத்தில் மக்கள் சுகாதார வழிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர நேற்று (07) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.