எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கப்போவதில்லை – அரசாங்கம்!

0

எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐஓசி விலை அதிகரிப்பினை மேற்கொண்டுள்ள நிலையிலேயே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் எரிபொருட்களின் விலை குறைவடைந்துள்ள போதிலும் அரசாங்கம் எரிபொருள் விலையினை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக வெளியான தகவலினையும் அந்த அமைச்சு நிராகரித்துள்ளது.

ஐஓசி தனது சொந்த முடிவின் அடிப்படையிலேயே விலையதிகரிப்பை செய்துள்ளதாகவும் அதில் அரசாங்கத்தின் தலையீடு எதுவுமில்லை எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு  குறிப்பிட்டுள்ளது.