எரிபொருள் விநியோகத்துக்கான பொறுப்பு சீனாவுக்கு வழங்கப்படாது – கம்மன்பில!

0

எரிபொருள் விநியோகத்துக்கான பொறுப்பை சீனாவுக்கோ அல்லது வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கோ வழங்குவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சீனாவுக்கோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்கே எரிபொருள் விநியோக நடவடிக்கையை ஒப்படைப்பது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது தொடர்பில் கலந்துரையாடல்கூட இடம்பெறவில்லை. இதனை மிகவும் பொறுப்புடனேயே கூறுகின்றேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.