எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் வரை மட்டுப்படுத்தப்பட்டது எரிபொருள் விநியோகம்?

0

எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் வரை எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு உள்ளடங்களாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்காரணமாக எல்.ஐ.ஓ.சி இல் அதிக விலைக்கு எரிபொருளினை நிரப்ப வேண்டியுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை எனவும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.