எரிவாயு தட்டுப்பாட்டால் நாடளாவிய ரீதியில் 20% சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளன

0

எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு என்பன காரணமாக, நாடளாவிய ரீதியில், 20 சதவீதமான சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நட்சத்திர விருந்தகங்களின் உணவு தயாரிப்பாளர்கள் மாற்று வழிகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதுடன், உணவு தயாரிப்புக்காக விறகு அடுப்பை பயன்படுத்துவது பிரதான மாற்றுவழியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மண்ணெண்ணெய் அடுப்பும் பயன்படுத்தப்படுவதாக தொழில்சார் உணவு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தில்ருக்ஷான் தாபரே தெரிவித்துள்ளார்.