எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்

0

இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

மாவட்ட தொற்று நோயியல் பிரிவு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

கடந்த 11 மாத காலப்பகுதியில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்து 128 பேர் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குருவிட்ட பகுதியிலேயே அதிகமானோருக்கு எலிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கமைய அப்பகுதியில் இதுவரை 168 பேர் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.