எல்லை மீறிய இந்திய மீனவர்களால் பல இலட்சம் பெறுமதியான மீன்பிடி வலைகள் நாசம்!

0

எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் யாழ்ப்பாணம்- வடமராட்சிக் கிழக்கு வெற்றிலைக்கேணி மீனவர்கள் மூவரது, பல இலட்சம் பெறுமதியான மீன்பிடி வலைகள் வெட்டப்பட்டு நாசம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்கள் மிகவும் வறிய நிலையில் வங்கிகளில் கடன்பட்டு, வலைகளை கொள்வனவு செய்து மீன்பிடியில் ஈடுபட்ட 3மீனவர்களது வலைகளே இவ்வாறு எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் நாசம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை), கடல் தொழிலிற்க்காக சென்ற 3 மீனவர்களது பல இலட்சம் பெறுமதியான வலைகளே இவ்வாறு இந்திய படகுகளால் துண்டாடப்பட்டும், இழுத்தும் எடுத்தும் செல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு தமது வலைகளை இழந்த குறித்த மீனவர்கள், அடுத்து என்ன செய்வதென்று தெரியாது. யாராவது தமக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.