எவ்வித முடிவும் எட்டப்படாமல் கலந்துரையாடல் நிறைவு!

0

பொதுத் தேர்தலுக்கான திகதி தொடர்பாக எவ்வித முடிவும் எட்டப்படாமல் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடல் நிறைவுக்கு வந்தது.

பொதுத்தேர்தல் தொடர்பாக கலந்துரையாடி திகதியை தீர்மானிக்கும் முகமாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (சனிக்கிழமை) அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தது.

தேர்தல்கள் ஆணைக்குழு கூடியதை அடுத்து பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகளின் செயலாளர்களை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சந்தித்தனர்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த இந்த சந்திப்பு, தேர்தல் திகதி தொடர்பாக எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில் முடிவுற்றது என்றும் பொதுத்தேர்தல் தாமதமாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

அத்தோடு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நாட்டின் நிலைமை குறித்து ஆராய்ந்து தேர்தலுக்கான திகதியை அறிவிப்பது என ஆணைக்குழு தெரிவித்ததாக மஹிந்தானந்த அழுத்தகமகே தெரிவித்தார்.