ஏப்ரல் மாதம் வரை நீர் மின்சாரத்தை பாதுகாக்க வேண்டும் – மின்சார பொறியியலாளர் சங்கம்

0

எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில், நீர் மின்சாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கிடைக்காவிட்டால், உரிய முறையில் இயங்க முடியாமல்போகும்.

ஏப்ரல் மாதமளவில் மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகையால் அதுவரையான காலப்பகுதிக்குள், நீர்மின்சாரத்தைப் பாதுகாத்துக்கொண்டு பயணிக்க வேண்டும்.

ஏனெனில், நீர் மின்சாரமும் தீர்ந்துபோனால், நாடு பாரிய மின்சார நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் அனில் ரஞ்சித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.