ஏப்ரல் 21 தாக்குதல் – இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கைகள் நிறைவு!

0

ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கும் செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுவரை இழப்பீடுகள் கிடைக்கப்பெறாதவர்கள் இருப்பின், அதுகுறித்து அறிவிக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறானவர்களுக்கு ஒரு வாரங்களுக்குள் இழப்பீடுகளை வழங்கத் தயார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை இழப்பீடுகள் கிடைக்கப்பெறாதவர்கள் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் இராஜாங்க செயலாளர் கீதாமுனி கருணாரத்னவிடம் தகவல்களை வழங்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.