ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு கடவுள் – அவருடன் என்னை எவ்வாறு ஒப்பிடலாம்? : ஜொஹானி

0

தன்னை ஜாம்பவான் ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஒப்பிட்ட ஊடகங்களுக்கு இலங்கைப் பாடகி ஜொஹானி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏர்.ஆர்.ரஹ்மான் இசையில் கடவுள். அத்தகைய ஜாம்பவானுடன் என்னை எப்படி ஒப்பிட முடியும்? ரஹ்மானுடன் என்னை ஒப்பிட்டுப் பார்க்க ஊடகங்கள் என்னை தெரிவு செய்ததில் நான் ஏமாற்றம் அடைகிறேன்.

ஒரு நாள் ரஹ்மானுடன் பணிபுரிய விரும்புகிறேன். அவர் எனக்கு முன்மாதிரி என ஜொஹானி கூறியுள்ளார்.

ஜொஹானியின் யூடியூப் சந்தாதாரர்கள் 2.95 மில்லியன் எனவும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2.93 மில்லியன் சந்தாதாரர்கள் எனவும் சமூக வலைத்தளங்களில் இருவரையும் ஒப்பிட்டு நேற்று வைரலானமை குறிப்பிடத்தக்கது.