ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் கொண்டுவர பேச்சு நடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி புதிய தலைவராக அக்கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் உறவினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தனவை நியமிக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
எனினும் இதுதொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.
பெரும்பாலும் அடுத்தவாரம் கூடுகின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் இறுதிமுடிவை கட்சித் தலைவர் எடுப்பார் என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.