ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 99 உறுப்பினர்களை இடைநீக்குவதற்கு தீர்மானம்!

0

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 99 உறுப்பினர்களை இடைநீக்குவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கூடியது.

இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களில் கையொப்பமிட்டவர்களே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.