ஐக்கிய மக்கள் சக்தியில் உறுப்புரிமை பெற்றார் சம்பிக்க !

0

முன்னாள் அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று (திங்கட்கிழமை) உத்தியோகப்பூர்வமாக இணைந்துள்ளார்.

அவருக்கு உறுப்புரிமையை வழங்க ஏற்கனவே செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கட்சியின் ஊடக பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாதிக ஹெல உறுமய கட்சியில் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்தும் 2020 டிசம்பரில் சம்பிக்க ரணவக்க விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.