ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவி சாதனை

0

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவி 198 புள்ளிகளைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.

வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவியான சிறிசங்கர் பவினயா என்னும் மாணவியே இந்த சாதனையினை படைத்துள்ளார்.

இவர் சீலாமுனையினை சேர்ந்த சிறிசங்கர் மற்றும் விரிவுரையாளர் உமா ஆகியோரின் மகளாவார்.

வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் உறுதிப்படுத்தப்படாத தகவலின் அடிப்படையில் 74மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்திபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தி அடைவு மட்டம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.