ஐ.தே.க.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் முக்கிய சந்திப்பு!

0

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்தச் சந்திப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் நாளை முக்கிய கலந்துரையாடல் ஒன்றுக்கு வருகை தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு நாளைய தினம் கோரிக்கை விடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.