ஐ.நாவின் உயர்மட்ட தலைவர் இலங்கைக்கு விஜயம்?

0

ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட பிரதிநிதியொருவர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நாவின் அரசியல் பிரிவு தலைவர் ரோஸ்மேரி டிகார்லோவே (Rosemary A. DiCarlo) இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் மட்டுபடுத்தப்பட்ட சில சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் அவர் சந்திப்புகளை நடத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக கூறப்படுகின்றது.

அனைத்து சந்திப்புகளும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியிலேயே இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நாவின் கிளை அமைப்புகளுள் ஒன்றான மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் விலகியுள்ள நிலையில், பொறுப்புகூறல் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதை மையப்படுத்தியே ரோஸ்மேரி டிகார்லோவின் இலங்கை பயணம் அமையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.