ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கையொன்றை விடுத்திருந்தது.
இலங்கை அரசாங்கத்தின் பலவீனமே இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட காரணம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உரிய வௌிநாட்டுக் கொள்கை இல்லாமை, அரசாங்கம் மனித உரிமைகளை மீறுகின்றமை மற்றும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்காமையே இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.