ஐ.நா தீர்மானம் காரணமாக இலங்கை மீது பொருளாதார தடைகளை விதிக்க முடியாது: கெஹெலிய ரம்புக்வெல

0

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் மூலம் பொருளாதார தடை விதிக்க முடியாதென அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனித உரிமைகள் பேரவையினால் அவ்வாறு செய்ய முடியாது எனவும் அதனை பாதுகாப்பு பேரவையே சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.

பேரவையால் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு நாடுகள் தொடர்பிலும் தீர்மானங்களை எடுக்க முடியும், என்றாலும் பாதுகாப்பு பேரவையில் உள்ள veto அதிகாரம் கொண்ட நாடுகளில் பெரும்பான்மையான நாடுகள் ஏதோ ஒரு வகையில் இலங்கைக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மனித உரிமைகள் பேரவையின் சில கொள்கைகளுக்கு முரணாகவே விடயங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.