ஐ.நா மனித உரிமைகள் விவகாரம்! – இலங்கைக்கு இந்தியா வழங்கிய உத்தரவாதம்

0

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தின்போது இலங்கையின் பிராந்திய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு நேற்றைய தினம் தெரிவித்துள்ளது.

வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.

மிக நெருங்கிய அண்டைய நாடான இலங்கையின் பிராந்திய இறையாண்மையைப் பாதுகாப்பதாக இந்தியா உறுதி பூண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வல்லரசு என்ற அடிப்படையில் இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கை பெரிதும் பாராட்டுகிறது.

இலங்கை அதன் பிராந்தியத்தில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தின் அந்த நாடுகளின் ஆதரவு தேவை.

ஏப்ரல் மாதம் தமிழ் நாட்டில் நடைபெறவுள்ள தேர்தல் உட்பட பல்வேறு காரணங்களால் இந்தியா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடுநிலை வகிக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.