ஒக்டோபர் 1ம் திகதியின் பின்னர் ஊரடங்குச்சட்டம் நீடிக்கப்படுமா?

0

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ம் திகதியின் பின்னர் ஊரடங்குச்சட்டம் நீடிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் குறைவு என ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் ஊடாக அதிகாரிகள் எதிர்பார்த்த நோக்கங்கள் நிறைவேறியுள்ளதாக தாம் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

அனைத்து தரப்பினரும் பொறுப்புணர்ச்சியுடனும், முன் பாதுகாப்புடனும் செயற்பட்டால் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதில் சிக்கல் இருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், மதுபானக் கடைகள் தற்போதைக்கு திறப்பது பொருத்தமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.