கொரோனாவில் மற்றும் பல திரிபுகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப ஆய்வுப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் (Maria Van Kerkhove)இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
எனவே இன்னும் சில காலத்திற்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உலக மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
கொரோனா திரிபுகளில் ஒமிக்ரோன் இறுதியானதாக இருக்காது மேலும் சில திரிபுகள் பொது மக்களைத் தாக்க வாய்ப்புள்ளது.
அத்துடன் கொரோனாவின் அடுத்த திரிபு, ஒமிக்ரோனை விட தீவிரமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அடுத்தடுத்த திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் எதிர்ப்புத்திறன் குறையக்கூடும்.
எனினும், நோய்த் தொற்று ஆபத்தையும் உயிரிழப்பையும் தடுப்பூசி பெருமளவு தடுக்கும் என்று மரியா வான் கெர்கோவ் தெரிவித்துள்ளார்.