ஒமிக்ரோன் இதுவரையில் 57 நாடுகளில் பரவியுள்ளதாக தகவல்!

0

ஒமிக்ரோன் வேகமாகப் பரவி வருவதாகவும், தற்போது அது 57 நாடுகளுக்கு பரவியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது மேலும் பல நாடுகளுக்கு பரவக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், பல்லாயிரம் பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், டெல்டா வைரசின் பாதிப்பை விடவும் குறைவான பாதிப்பே ஒமிக்ரோனால் ஏற்பட்டிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.