ஒமிக்ரோன் மாறுபாட்டால் முதல் மரணம் பதிவானது!

0

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் இங்கிலாந்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேற்கு லண்டனில் அமைந்துள்ள தடுப்பூசி நிலையத்துக்கு சென்றபோதே பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோன் தொற்றினால் ஒருவர் உயிரிழந்திருப்பது இது முதல் சந்தர்ப்பம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.