ஒருமித்த நாட்டிற்குள் தீர்வு வேண்டாம் – தனி நாடே வேண்டும் என வலியுறுத்தி கனடாவில் ஆர்ப்பாட்டம்!

0

ஒருமித்த நாட்டிற்குள் தீர்வு வேண்டாம் எனவும், தனி நாடே வேண்டும் எனவும் வலியுறுத்தி கனடாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் கனடாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்தநிலையில் அங்குள்ள கூட்டமைப்பின் ஆதரவாளர்களை குறித்த இருவரும் கனேடிய நேரப்படி இன்று இரவு சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்த பேசியிருந்தனர்.

இதன்பாது குறித்த இடத்திற்கு சென்றிருந்த சிலர் ஒருமித்த நாட்டிற்குள் தீர்வு வேண்டாம் எனவும், தனி நாடே வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு தனி நாடு வழங்கப்பட வேண்டும் எனவும் இதனபோது கோஷங்கள் எழுப்பப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.