ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உழைப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி

0

இலங்கையில் மாதம் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிப்பவர்களுக்கு 5% வரி விதிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த வரி கல்வி மற்றும் சுகாதார போன்ற சமூக நல நடவடிக்கைகளுக்கு பயன்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஏராளமான இலங்கையர்கள் தங்கள் குழந்தைகளுக்காக சர்வதேச பாடசாலைகளில் சேர்த்து அதற்காக பணம் செலுத்துகின்றனர்.

அதேபோல், தனியார் மருத்துவமனைகளிலும் பலர் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்கிறார்கள்.

அவர்களும் உரிய வரி செலுத்த வேண்டுமா? இல்லையா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.