ஒரு கிலோ அரிசியை 97 ரூபாய்க்கு வழங்க தீர்மானம்!

0

தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் ஒரு கிலோ அரிசி 97 ரூபாய் என்ற உத்தரவாத விலைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

நெல் அறுவடை இடம்பெறும் மாவட்டங்களில் உத்தரவாத விலையின் கீழ், நெல் கொள்வனவு செய்யப்படுகிறது.

விவசாயிகளுக்கு உரமானியமும் வழங்கப்படுகிறது. நெல் கொள்வனவு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கொண்டுவரும் பிரசாரங்கள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெல்லை கொள்வனவு செய்வதற்கென அரசாங்கம் 23 ஆயிரம் மில்லியன் ரூபாயினை ஒதுக்கியிருக்கிறது.

வரலாற்றில் நெல் கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்ட மிகக் கூடுதலான தொகை இதுவாகும் எனவும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.