ஒரு மாதத்திற்கு பொது முடக்கம்- வார இறுதியில் வெளியாகவுள்ள அறிவிப்பு

0

கொரோனா மற்றும் டெல்ட்டா வைரஸ் பரவலின் தீவிரம் காரணமாக ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு மற்றும் கடும் சுகாதார பாதுகாப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள அரசு, அடுத்தகட்ட நகர்வாக நாட்டை முடக்குவதற்கு ஆலோசித்து வருகிறது.

வார இறுதியில் இந்த முடக்கம் அமுலுக்கு வரலாமெனவும், இடை வேளை சகிதமான இந்த முடக்கம் சுமார் ஒரு மாத காலம்வரை நீடிக்குமெனவும் சுகாதாரத்துறையின் உயர்மட்ட வட்டாரங்கள் நேற்றிரவு தமிழன் செய்திகளிடம் தெரிவித்தன.

பொதுமுடக்கம் கடுமையாக கடைப்பிடிக்கப்படும் அதேசமயம் அத்தியாவசிய சேவைகளை மட்டும் இயக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்கம் குறித்தான அரசின் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.