ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா தொற்று

0

கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய 52 பேர் ஒரே நாளில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய 52 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இவர்களில் 49 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பி, திருகோணமலை மற்றும் மின்னேரியா தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தவர்கள் என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏனைய மூவரில் இரண்டு கடற்படையினர் மற்றும் ஒருவர் இந்தோனேஸியாவில் இருந்து நாடு திரும்பியவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம் கொரோனா தொற்றுறுதியான 14 பேர் பூரண குணமடைந்து நேற்று மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். இதற்கமைய குணமடைந்தோரின் எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 458 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.