31வது தேசிய இளைஞர் விளையாட்டுப்போட்டிகளின் வரிசையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற மட்டக்களப்பு மாவட்ட கபடி அணிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், ஒற்றுமைப்பட்டால் வெற்றி கிடைக்கும் இதற்க்கு எமது கபடி அணியின் இளைஞர்களின் வெற்றி நல்ல எடுத்துக்காட்டு. ஊடகங்களுக்கு விடுத்த வாழ்த்துச்செய்தியில் இரா.சாணக்கியன் தெரிவிப்பு.
அவர் மேலும் அந்த வாழ்த்துச்செய்தியில்,
பிரதேசம் என்று வருகின்ற போது அந்த பிரதேசத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் ஒன்றினைய வேண்டும், அப்போது தான் மாவட்டத்தில் வெற்றி பெற முடியும். அதே போன்றுதான் தேசிய ரீதியில் போட்டி என்று வருகின்ற போது பிரதேசத்தில் உள்ள திறமையானவர்கள் ஒன்றினைய வேண்டும் அப்போது பாரிய வெற்றியை பெறமுடியும்.
அந்த வகையில் எமது மாவட்ட இளைஞர்கள் ஒற்றுமையாக கூட்டாக முயற்சித்தமையினால்தான் தேசிய வெற்றியை பெற முடிந்தது. இதன் மூலம் எமது மட்டக்களப்பு மாவட்டத்தின் பெயரை நாடறிய செய்துள்ளார்கள்.
தொடர்ந்து இதே போன்று எமது தமிழ் மக்களும் ஒற்றுமை படுவதன் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை பெறமுடியும். இவ்வாறே வடகிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க தமிழர்கள் அனைவரும் ஒற்றுமைபட்டு ஒரே தெரிவாக தமிழ்தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பதனூடக எம் மக்களின் பலத்தை அமைவுள்ள பாராளுமன்றத்தில் நிலை நிறுத்த முடியும். அந்த நம்பிக்கை எனக்கிருக்கிறது என குறிப்பிட்டார்.